Recent Posts

நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?

3 comments

 
நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?

test

1 comment
மும்பை :இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர் விமானங்களில், நாலில் ஒரு பங்குதான் அதாவது 26 சதவீத விமானங்கள் மட்டுமே தற்போது எந்நேரத்திலும் இயங்கும் நிலையில் இருப்பதாகவும், மற்றவை அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.,) அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பில் கடற்படைக்கு முக்கிய இடம் உண்டு. அதன் தற்போதைய அவலநிலை குறித்து சி.ஏ.ஜி., கவலை தரும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடற்படையில் உள்ள போர் விமானங்களில் பெரும்பாலானவை 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அடிக்கடி பழுதடைகின்றன. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால் எத்தகைய போர் விமானமும் பழையதாகவே கருதப்படும்.குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும், "கேம்வோஸ்', "சீ கிங்' ஆகிய ஹெலிகாப்டர்கள் 23லிருந்து 29 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன. "சீஹேரியர்' போர்விமானம், 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.போர் விமானங்களில் 26 சதவீதம் மட்டுமே எந்நேரத்திலும் இயங்கக் கூடிய நல்ல நிலையில் உள்ளன. மற்றவை அடிக்கடி பழுதடையும் நிலையில் உள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் பி.வி.எஸ். சதீஷ் கூறுகையில்,"இப்படி ஒரு பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. நாம் போர் விமானங்களைத் தயாரிக்கும் நாடு அல்ல. புதிய விமானங்களை வாங்கக் கூடிய நிலையிலும் நாம் இல்லை. வெளிப்படையான தன்மை இல்லாமை போன்ற பல பிரச்னைகளால் இந்நிலை இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் குறித்து மத்திய ராணுவ அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்தக் குறைபாடுகள் நீங்கி விடும்' என்றார்.

ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கே.ராஜமேனன் கூறுகையில்,"நமது அமைச்சங்கள், பெரிய பெரிய கோப்புகளை வைத்துக் கொண்டு, தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு  தொடர்ந்து தடைகளை உண்டு பண்ணுகின்றனர். இதைப் போல ஒரு புதுமை வேறு எங்கும் கிடையாது' என்று குற்றம் சாட்டினார்.

இந்திய பாதுகாப்பில் கடற்படையின் போர் விமானப் பிரிவின் பங்கு முக்கியமானது. ஆனால், நவீன ரக போர் விமானங்களை வாங்கும் அளவுக்கு உட்கட்டமைப்பு வசதி அங்கு இல்லை. 2004ல் 567 கோடி ரூபாய் செலவழித்து ஆளில்லா போர் விமானங்கள் வாங்கப்பட்டன. ஆனால் அவற்றை ஏவும் ஏவுதளங்கள் லட்சத் தீவுகள் மற்றும் அந்தமானின் போர்ட் பிளேரில் இன்னும் கட்டப்படவில்லை.  அதனால் அவை வாங்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இயக்கப்படவில்லை.நான்கு மிக்-29 கே ரக போர் விமானங்கள் வாங்கப்பட்டு விட்டன. ஆனால், இந்திய கடற்படையின் ஒரே விமானந்தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விராட் போர்க்கப்பலில் அவற்றைப் பொருத்தி செயல்படுத்த முடியவில்லை. அதற்கான வசதிகள் அக்கப்பலில் இல்லை. கூடுதலாக 15 மிக் ரக போர் விமானங்கள் வரும் 2013க்குள் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா என்ற கப்பலுடன் வந்து சேரும்.

இப்படிப்பட்ட நிலையிலும் ,வரும் 2020க்குள், இந்திய கடற்படை உலகின் மிகப் பெரிய கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலை ஏற்படும் என்று கூறும், கடற்படையின் மூத்த அதிகாரி ,"ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை  இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு  மிகப் பெரிய கடற்படையாக மாற முடியும்' என்றார்.